தீராத சளி தொல்லை

சளி என்றாலே பெரும்பாலானவர்களுக்கு ஒரு அருவருப்பான விஷயம். தமக்கு சளி பிடித்தால் கூட அதை சிந்துவதற்கு வெட்கப்பட்டு சளியை சிந்தாமல் மூக்கை உறிஞ்சி கொண்டே இருப்பர். தம் குழந்தைகளுக்கு சளி பிடித்தாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் அளவிற்கு நம்மால் உடனே சளியை தொட முடிவதில்லை.



  • சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக் குழாய் அழற்சி  அல்லது கபவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும். 
  • நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும். நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்து வந்து விடும்
  • மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள். கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள். நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும். 



மாதுளம் பழத்தின் சிறப்புகள்

மாதுளம்பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்து விட்டு விதைகளை உமிழ்ந்து விடுவார்கள். ஆனால் மாதுளம்பழத்தின் சத்தே அதன் விதைகளில் தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.




  •  பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம்.
  • மாதுளையின் விதைக்குச் காச ரோகத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும், சுக்கிலத்தைப் பெருக்கும் சக்தியும் நீர்க்சுருக்கும் நோய்களைக் குணமாக்கும் தன்மையும் உண்டு. பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு மாதுளை மிகவும் சிறந்தது.




  • மாதுளை சாறு தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
  • மாதுளம் பழத்தைப் பொருத்தவரை பூ, தோல், விதை என அனைத்து மே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை. மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாயமாக செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பலபிணிகளும் அகலும். மாதுளம் பழரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறைபாடுகளை அகற்றும்.


கேரட் ஜூஸ்

உடல் எடையை குறைக்க வேண்டுமென்று டயட்டில் இருப்போர் காலை மற்றும் மாலையில் கேரட்டை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதுடன், உடலில் பல நோய்கள் ஏற்படாமலும் தடுக்க முடியும்.


தேவையான பொருள்கள்:

  • கேரட் – 1
  • பால் – ஒரு டம்ளர்
  • தண்ணீர் – ஒரு  டம்ளர்
  • சக்கரை –  ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை :-
  • கேரட்டை தோலை நீக்கி பூத்துருவலாக துருவவும்.
  • துருவலை மிக்சியில் போட்டு பால், பாதி தண்ணீர், சக்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.அரைத்ததை வடிக்கவும்.
  • மறுபடி மிக்சியில் போட்டு மீதி தண்ணீரை சேர்த்து அரைத்து வடிக்கவும்.
  • இதனுடன் ஆப்பிள் ஒரு துண்டு சேர்த்து அரைத்தால் நல்ல சுவையாக இறக்கும்.
 ⇒ குறிப்பாக கண் பார்வை கோளாறு, புற்றுநோய் போன்ற பல நோய்களை தடுக்கலாம்.


செல்போனுடன் உறக்கமா?


அலைபேசியை அதிகம் பயன்படுத்துவது உயிருக்கே உலை வைக்கும் என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கடினம்தான்.அலைபேசியில் அதிகம் பேசப் பேச பணம் அலையாகக் கரைகிறது. முன்பெல்லாம், தொலைபேசி மட்டுமே இருந்த இல்லங்களில் கூடுதலாக அலைபேசிகளும் பயன்படுத்தப்படுகின்றன. அலைபேசியின் செலவு அவசியமற்ற செலவு என்பதை பெரும்பாலானவர்கள் உணராத அளவுக்கு அலைபேசிப் பைத்தியம் மக்களை ஆட்கொண்டிருக்கிறது என்பது வேதனையான உண்மை.



  • செல்போனுடன் விழித்து, அதனுடனே நாள் முழுவதும் வேலை செய்து, உறங்கும் தருவாயிலும் செல்போனுடனே இருக்கிறோம்.இந்நிலையில் கலிபோர்னியா சுகாதாரத்துறை ஆய்வு ஒன்றை நடத்தியது.



  • அதன்படி, செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் ஒருவித ரேடியோ அதிர்வலைகள் செல்போன் மூலம் நம்மைத் தாக்குவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மருத்துவமனைகளில் மூளையில் கட்டிகளுடன் வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர், 10 ஆண்டுக்கும் மேலாக செல்போனை அருகில் வைத்து உறங்கும் பழக்கம் கொண்டவர்கள்.



கற்றாழை ஜூஸ்

கற்றாழை சரும அழகை மட்டும் அதிகரிக்க பயன்படுவதில்லை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தான் பயன்படுகிறது. குறிப்பாக கற்றாழை ஜூஸை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறையவும் உதவும்.


  • நீரிழிவு நோயாளிகள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வருவது நல்லது. ஏனெனில் கற்றாழை ஜூஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப்  பராமரிக்க உதவும்.  மேலும் இது அல்சரால் வயிற்றில் ஏற்படும் இரத்தக் கசிவுகளை நிறுத்தும்.
  • கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும். இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.


புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி.

இயல்பான சாதரண ஜீன்களில் திடீர்மாற்றம் ஏற்பட்டு அவை மிகவேகமாக பெருக்கமடைந்து ஒரு திசுவிலிருந்து மற்றொரு திசுவிற்கு பரவி கட்டியாக மாறி புற்று நோயாகிறது. சாதரண கட்டிகளும் புற்று நோயாகா மாறக் கூடிய அபாயம் உண்டு. சாதரண கட்டிகள் இறந்த செல்களின் குவியல் என சொல்லலாம். அவற்றில் புதிய செல்கள் வளர முடியாமல் அந்த இடத்தில் மாற்றம் ஏற்பட்டு அவை புற்று நோய் செல்களாக மாறிவிடும். 

செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பணித்தளங்கள் போனறவற்றிற்கு உட்படும்போது இது போன்ற மாற்றங்கள் மரபிகளில் ஏற்படுகிறது. எச்.ஐ.வி நோய் தொற்றுவில் இது போன்ற திடீர் மாற்றம் ஏற்படும். சில வேளைகளில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.

புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்
  • புகையிலை பயன்படுத்தக்கூடாது.
  • சூரிய ஒளியினை-10 மணியிலிருந்து 4 மணிவரை- தவிர்க்க வேண்டும்.
  • கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.


திராட்சை ஜூஸ் பயன்கள்

திராட்சை என்றதும் நம் நினைவில் வருவது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். ஆனால் திராட்சையில் பல வகைகள் உள்ளன. அதில் நிறைய சத்துக்கள் உள்ளது. திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கபடுகிறது.


  • பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.
  • திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.
  • திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும்.
  • திராட்சை ஜூஸ் இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுத்து, உடலில் இருக்கும் இரத்தத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.



  • திராட்சை ஜூஸ் நேரடியாக உடல் எடையைக் குறைக்க உதவாவிட்டாலும், இதனை உடற்பயிற்சி செய்து முடித்த பின் ஒரு டம்ளர் குடிப்பதன் மூலம், மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.

கொய்யாவில் மறைந்திருக்கும் அற்புதங்கள்!!!

கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன. உண்மையில் கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம் மிகவும் உதவி செய்கிறது. கொய்யாவில் பலவகைகள் உள்ளன, அவற்றில் சிலவகை தடித்த தோலுடனும், சிலவகை மெல்லிய தோலுடனும் காணப்படும்.


  • கொய்யாபழத்தில் வைட்டமின் B மற்றும் C ஆகிய உயிர்ச்சத்துக்களும்,கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புக்களும் கொட்டிக் கிடக்கின்றன.


  • கொய்யா இலையை வாயில் இட்டு மென்று, அப்படியே பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும், ஆடும் பற்கள் கெட்டிப்படும், பற்சொத்தை நீங்கும், பல் வலி குணமாகும் பல்லில் உள்ள கறைகள் நீங்கி பற்கள் வெண்ணிறமாகும்





முதுகு வலி உயிர்போகுதா?

முதுகு வலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது.இன்றைக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தலையாய பிரச்சினையாக உள்ளது. இதற்கு காரணம் பள்ளி குழந்தைகள் பொதி சுமப்பதும், இளைய தலைமுறையினர் ஒரே இடத்தில் அமர்ந்து கம்யூட்டர் முன்பு வேலை பார்ப்பதும்தான் என்கின்றனர் மருத்துவர்கள். முதுகுவலிக்கான காரணங்கள் குறித்தும் அதற்கான தீர்வுகளையும் தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.

.
  •  நாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே நமது எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து இருக்கிறது. கால்சியத்தை எலும்பு கிரகிக்கவும், முதுகு வலிக்கு முடிவு கட்டவும் ஒரே வழி உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யும்போதுதான், எலும்புகள் தங்களுக்குத் தேவையான கால்சியத்தை உறிஞ்சும். எனவே நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் போன்ற எலும்பு மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய  வகை உடற்பயிற்சிகள் நல்லது. இவை தவிர, உடலின் வளைவுத்தன்மைக்கு உதவும் யோகாவும் எலும்பின் ஆரோக்கியத்தைக் காக்க வல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.


  • வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு துண்டை நனைத்து அதனை முதுகு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலிக்கு நிவாரணம் கிடைக்கும். அனைத்தையும் விட ஒரே பொசிசனில் அதிக நேரம் அமர்ந்திருக்க வேண்டாம். அவ்வப்போது எழுந்து நடந்தாலே முதுகுவலிக்கு காரணமான தசை அழுத்தம் ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.





நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

நெல்லிக்கனியில் உள்ள மருத்துவக் குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்று கூறுவதுண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது.


  • பச்சை நெல்லிக்காய், துளசி, கொட்டை நீக்கிய முற்றின கடுக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சமவிகிதத்தில் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டி, அதைவிட மூன்று மடங்கு அதிகமான அளவுக்கு தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும். இதை தினமும் கேசத்தில் தடவிவந்தால், முடி உதிர்வை  தடுக்கும்.


  • நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி  மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது.



கருப்பட்டி நன்மைகள்!!!


கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் தான், இரத்த சோகை பிரச்சனை ஏற்படும். எனவே இரத்த சோகை ஏற்படாமல் இருக்க, கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.


  • பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்து வந்தால் இடுப்பு வலிப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
  • கருப்பட்டியில் உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்குத் தேவையான கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. ஆகவே இதனை ஒருவர் குடிக்கும் காபி அல்லது  டீயில் சேர்த்துக் குடிப்பதால், கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும். சர்க்கரையில் கலோரிகள் மிகவும் அதிகம்.
  • சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.


இளநரை ஏற்படுவதை தடுக்கும்-அகத்தி கீரை

தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். அகத்தி கீரை சுவையானது மட்டுமல்லாமல் பல சத்துக்களையும், விட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஏராளமான மருத்துவக் குணங்களை கொண்ட அகத்தியின் வேர், இலை, பட்டை, பூ என்று பல பாகங்களும் பயனுடையது. அகத்திக் கீரை உடலிள்ள துர்நீரை வெளியேற்றும். பித்த நோயை நீக்கும். வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும் குணம் அகத்திக் கீரைக்கு உண்டு.

  • அகத்திக்கீரை இரும்புச்சத்து அதிகம் நிறைந்தது. அத்துடன் நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான உணவுகளில் முதன்மையானது. 
  • அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து கரும்பட்டை,தேமல்,சொறி,சிரங்கு உள்ள  இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்.
  • அகத்தி இலைச் சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்தி வர ஒரு மாதத்தில் இருமல் விலகும். சாற்றில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்த  வயிற்றி வலி தீரும். அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேர் மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது.
  • உடலின் அதிகப்படியான பித்தத்தைக் குறைக்குமாம், ஜீரண சக்தியை அதிகரிக்குமாம். உணவில் கலந்து கொடுக்கப்படும் விஷப்பொருள்களை முறிக்கும் குணமுடையதாம் நிறைய சாப்பிட்டால் வாயு பிரச்சனை உண்டாகுமாம்.
  • அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும், இளநரை ஏற்படுவதையும் தடுக்கும். 


எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்!

சர்வரோக நிவராணியான எலுமிச்சை பழத்தில் ஏராளமான மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளன. எலுமிச்சை சாறு, ஆன்டிபாடிக்களை, அதிகரித்து தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும்.


  • எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
  • எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தகர்த்து விடுகிறது. அல்கலைன் அதிகமுள்ள எலுமிச்சை ஜூஸ் நம்மை எப்போதுமே சந்தோஷப்படுத்தி, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
  • இப்பழத்தில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து, பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நாம் குறைவாகவே சாப்பிடுவோம். உடல் எடையும் குறைந்துவிடும்.
  • எலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் அபரிமிதமாக நிரம்பி வழியும் வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது. தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது.
  • மேலும் எலுமிச்சை ஜூஸ், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, பொலிவற்று இருக்கும் சருமத்தையும் பொலிவாக்கும். எனவே எலுமிச்சை சாற்றை தினமும் பருகினால், அழகாக சருமத்தை பெறலாம்.


பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் அந்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. 

ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. 

வயிற்று பிரச்சனைகள் :-

பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும். 


மன அழுத்தம் :-

பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.






கண்பார்வை சிறக்க இந்த ஜூஸ் குடிங்க!

இன்று பரவலாக பெரும்பாலான மக்கள் கூறும் உடல்நல பிரச்சனைகள் சிலவன இருக்கின்றன, இளம் வயதிலேயே கண் பார்வை குறைபாடு, செரிமான கோளாறுகள், இதய நலன் குறைபாடு, உடல் பருமன், இரத்தம் சுத்தமின்மை, பல் வலி மற்றும் சில. இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு இருக்கிறதா? இருந்தால் அது என்ன? இருக்கிறது! நீங்கள் இயற்கை உணவுகளை உண்ண வேண்டியது தான் அது. 
நமது வாழ்வில் இன்று நாம் உண்ணும் பல உணவுகள் ரசாயன கலப்பு உள்ள ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகள் தான். உங்கள் உணவுமுறையில் காய்கறி, பழங்களை சரியாக சேர்த்துக் கொண்டாலே இவற்றுக்கு எல்லாம் நல்ல தீர்வு காண முடியும். 
மேலும், இந்த பேரிக்காய், ஆப்பிள், அப்ரிகோட் மற்றும் சோயா தயிர் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸும் பல சின்ன சின்ன உடல்நல பிரச்சனைகள் உண்டாகாமல் இருக்க பயனளிக்கிறது. இனி, இந்த ஜூஸை எப்படி தயாரிப்பது மற்றும் இதன் நன்மைகள் என்னென்ன என்று பாப்போம்....
  • பேரிக்காய் – 1
  • ஐஸ் கட்டி – 8
  • ஆப்பிள் – 1
  • சோயா தயிர் – 1 கப்
  • அப்ரிகோட் - 4  
செய்முறை:-
1)பேரிக்காயின் நடுப்பகுதியை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
 2)ஆப்பிளின் நடுப்பகுதியை நீக்கிவிடவும், பிறகு ஆப்பிளை ஸ்மூத்தாக ஜூஸ் போன்று அரைத்துக்கொள்ளவும்.
 3)அப்ரிகோட்ட்டின் நடுபகுதியை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 
4)அறுத்து வைத்த பேரிக்காய், அப்ரிகோட், ஐஸ் கியூப் மற்றும் சோயா தயிர் போன்றவற்றை ஒன்றாக நன்கு கலக்குங்கள்.
 5)பிறகு முன்பு அரைத்து வைத்த ஆப்பிள் ஜூஸ் மற்றும் இதையும் ஒன்றாக கலக்குநன்மைகள்.
 நன்மைகள்:-
ஸ்ட்ரோக் வராமல் பாதுகாக்கும் ஆஸ்துமாவை எதிர்க்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் வயிற்றுப்போக்கு ஏற்படாமல் இருக்க உதவும் கட்டிகள் உண்டாகாமல் இருக்க பயனளிக்கும்.




மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

கடல் உணவுகளில் மீன் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். மீனில் எண்ணற்ற அளவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருப்பதுடன், முக்கியமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.


இதய நோய்:-
ஒவ்வொரு வாரமும் மீனை தவறாமல் உட்கொண்டு வந்தால், இதயம் சீராக இயங்கி, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை வராமல் தடுக்கும்.
பார்வைக் கோளாறு:-
 தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், மீனை சாப்பிட்டு வந்தால், குழந்தைக்கு தாய்ப்பாலின் மூலம் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது சென்று, அவர்களுக்கு தெளிவான பார்வையைக் கொடுக்கும்.
நீரிழிவு:-
 நீரிழிவு உள்ளவர்கள், மீனை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம்.


பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.

இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது. எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம்.
பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால் இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூமியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும்போது விதையில் இருந்து தவின் கிடைக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.


நீரில் சீரகப் பொடியை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள், மயக்க பண்புகள், ஆன்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் உள்ளன. அதோடு இதில் டயட்டரி நார்ச்சத்து, கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, காப்பர், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, செலினியம், ஜிங்க், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பல்வேறு பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் உள்ளன.

செரிமானத்திற்கு உதவும்:-


 ஆயுர்வேதத்திற்கு செரிமான பிரச்சனைகளான வயிற்று வலி, அஜீரண கோளாறு, வயிற்றுப் போக்கு, வாய்வுத் தொல்லை, குமட்டல் போன்றவற்றிற்கு சீரகம் பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு 1 டீஸ்பூன் வறுத்த சீரக பொடியை 1 டம்ளர் நீரில் சேர்த்து கலந்து தினமும் 1-2 முறை குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், 1/4 டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடியை ஒரு டம்ளர் மோரில் கலந்து, அத்துடன் 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, தினமும் ஒருமுறை குடிக்கலாம். 

எடை குறைவு:-

சீரகம் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் இது உடலில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைக்க உதவுவதோடு, ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொழுப்புக்களின் அளவையும் குறைக்கும். அதோடு சீரகம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரையச் செய்யும். இதன் விளைவாக அதிகப்படியான உடல் எடை குறைந்து, சிக்கென்று மாறலாம். அதற்கு ஒரு கப் தயிரில் 1 டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடி சேர்த்து கலந்து, தினமும் 2 வேளை சாப்பிடுங்கள்.




பிளாக் டீ-Black Tea

பிளாக் டீ பருகுவது நன்மையா? தீமையா?
பிளாக் டீ என்பது கருப்பு தேயிலையை இரசாயன கலவையில் ஆக்சிஜனுடன இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுவது. பிளாக் டீயில் 10% பாலிபீனால்கள் உள்ளது.

நன்மைகள்:
# நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் ஆகியவை பிளாக் டீ அருந்துவதால் தடுக்கப்படுகிறது.
# வாய் வழி புற்று நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
# பிளாக் டீயில் காஃபின் குறைந்த அளவு இருப்பதால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
# மேலும், சுவாச அமைப்பு, சிறுநீரகம் மற்றும் இதய இயக்கத்தை சீராக்குகிறது.
# பிளாக் டீயில் உள்ள ஒரு குறிப்பிட்ட பொருள் நோய்யெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
# பிளாக் டீயில் உள்ள அமினோ ஆசிட் மன அழுத்தத்தை குறைத்து மனதை ரிலாக்ஸ் செய்கிறது.
தீமைகள்:
# ஒரு நாளைக்கு 4 கப்புகளுக்கு அதிகமாக பிளாக் டீ அருந்த கூடாது.
# அதிகமான பிளாக் டீ பருகினால் உறக்கம் பாதிப்படைய கூடும்.