நீரில் சீரகப் பொடியை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள், மயக்க பண்புகள், ஆன்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் உள்ளன. அதோடு இதில் டயட்டரி நார்ச்சத்து, கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, காப்பர், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, செலினியம், ஜிங்க், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பல்வேறு பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் உள்ளன.

செரிமானத்திற்கு உதவும்:-


 ஆயுர்வேதத்திற்கு செரிமான பிரச்சனைகளான வயிற்று வலி, அஜீரண கோளாறு, வயிற்றுப் போக்கு, வாய்வுத் தொல்லை, குமட்டல் போன்றவற்றிற்கு சீரகம் பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு 1 டீஸ்பூன் வறுத்த சீரக பொடியை 1 டம்ளர் நீரில் சேர்த்து கலந்து தினமும் 1-2 முறை குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், 1/4 டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடியை ஒரு டம்ளர் மோரில் கலந்து, அத்துடன் 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, தினமும் ஒருமுறை குடிக்கலாம். 

எடை குறைவு:-

சீரகம் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் இது உடலில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைக்க உதவுவதோடு, ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொழுப்புக்களின் அளவையும் குறைக்கும். அதோடு சீரகம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரையச் செய்யும். இதன் விளைவாக அதிகப்படியான உடல் எடை குறைந்து, சிக்கென்று மாறலாம். அதற்கு ஒரு கப் தயிரில் 1 டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடி சேர்த்து கலந்து, தினமும் 2 வேளை சாப்பிடுங்கள்.




No comments:

Post a Comment