கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் தான், இரத்த சோகை பிரச்சனை ஏற்படும். எனவே இரத்த சோகை ஏற்படாமல் இருக்க, கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.
- பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்து வந்தால் இடுப்பு வலிப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
- கருப்பட்டியில் உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்குத் தேவையான கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. ஆகவே இதனை ஒருவர் குடிக்கும் காபி அல்லது டீயில் சேர்த்துக் குடிப்பதால், கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும். சர்க்கரையில் கலோரிகள் மிகவும் அதிகம்.
- சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

No comments:
Post a Comment